கோவை நாடக சங்க விழாவில் கலந்து கொண்ட சுவாமி சங்கரதாஸ் அணியைச் சேர்ந்த ஜசரி கணேஷ் , பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஐசரி கணேஷ்,’ நீதிமன்றத்திற்கு சென்ற பின்னர் அனைத்து வழக்குகளும் ஒன்றாக்கப்பட்டு நாளை தீர்ப்பு வரவாய்ப்பு இருக்கின்றது. நீதிமன்ற தீர்ப்பு எப்படி வந்தாலும் அதை ஏற்றுக்கொள்வோம்.
நடிகர் சங்கத்தில் கடந்த முறை 36 செயற்குழு கூட்டத்தில் 24 கூட்டங்களில் நடிகர் விஷால் கலந்து கொள்ளவில்லை. நடிகர் சங்கம் சார்பில் கொடுக்கப்படும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்ற தகவல் இப்போதுதான் கிடைத்தது. அக்டோபர் மாதத்தில் இருந்து 600 பேருக்கும் ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. விஷால் செயல்பாடுகளால் தேர்தலில் போட்டியிட்டேன். நடிகர் சங்க கட்டடம் சீக்கிரம் வரவேண்டும் என்பதே தன்னுடைய எண்ணமும் என்று கூறினார்.
மேலும், ஆன் லைன் மூலம் டிக்கெட் கொடுக்கும் முறை வரவேற்கத்தக்கது. இதற்கு தமிழக அரசிற்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். டிக்கெட் விற்பனைக்கு என அரசே தனியாக செயலி துவங்க வேண்டும். டிக்கெட் ஆன்லைனுக்கு வந்துவிட்டால் நடிகர்களின் சம்பளம் குறைய வாய்ப்பு இருக்கின்றது' என்றார்.
இதையும் படிங்க:
கோவை நகைக்கடையில் தீ விபத்து: நல்வாய்ப்பாக தப்பிய நகைகள்...!