கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழலில், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாத காரணத்தினால் கடந்த 13ஆம் தேதிமுதல் கோவை மாவட்டம் முழுவதும் இறைச்சிக் கடைகள், மீன் விற்பனைக் கடைகள் இயங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்திருந்தது.
இதைத் தொடர்ந்து விற்பனையாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சில கட்டுப்பாடுகளை விதித்து, மீண்டும் இறைச்சிக் கடைகள் காலை 6 மணிமுதல் மதியம் 12 மணிவரை செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, இன்றுமுதல் மாவட்டம் முழுவதும் இறைச்சிக் கடைகள் செயல்படத் தொடங்கியுள்ளன. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுக்கு இணங்க வாடிக்கையாளர்கள் தகுந்த இடைவெளிவிட்டு நிற்கும் வகையில் கடைகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கறிக்கோழி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கறிக்கு ஆசைப்பட்டு கம்பி எண்ணும் இளைஞர்கள்... டிக்டாக்கால் நடந்த கைது!