வடகிழக்குப் பருவ மழை இரு தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. குறிப்பாக கோவையில் நேற்று காலை முதலே சில இடங்களில் மழை பெய்துகொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை சுமார் ஆறு மணியளவில் தொடங்கிய மழை இரவு முழுவதும் பெய்தது.
இதனால் தடாகம் பகுதிகளைச் சுற்றியுள்ள ஊர்களில் மழை நீர் ஆறாக ஓடியது. மேலும் இந்த வடகிழக்குப் பருவமழை இரு தினங்களுக்கு தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதனால் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் காய்ச்சல் ஏதேனும் வந்தால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஒரே கோயிலில் ஐந்தாவது முறையாக அரங்கேறிய கொள்ளை - காவல் துறையினர் அதிர்ச்சி