ETV Bharat / state

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வுக் கூட்டம்!

கோயம்புத்தூர்: கரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் வால்பாறையில் நடைபெற்றது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை
author img

By

Published : Mar 30, 2020, 1:20 PM IST

கரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றது. கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை நகராட்சி சார்பாக எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வுக் கூட்டம்!

நகராட்சி, மருத்துவத் துறையினர் இரண்டு நாட்களாக வால்பாறை பகுதியில், வெளியூர் சென்று வந்துள்ள நால்வரை பரிசோதித்தது. அதில், ஒருவருக்கு காய்ச்சல் இருந்தது. மேலும், மற்ற மூன்று பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவாமலிருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு தெரிவித்தார்.

இதையடுத்து, நிகழ்வில் வால்பாறை நகராட்சி ஊழியர்களுக்கு முகக்கவசம், சீருடைகள் வழங்கப்பட்டன. வீடில்லாத ஆதரவற்றோருக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு மதிய உணவு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் பவுன்ராஜ், நகர செயலாளர் மயில் கணேசன், ஆரம்ப சுகாதார மருத்துவர் பாபு லட்சுமணன், அரசு மருத்துவர் வினோத், வனத்துறையினர் நடராஜன், சக்திவேல், உயர் அலுவலர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ஊரடங்கினால் உச்சத்தைத் தொட்ட இறைச்சிகளின் விலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.