ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @9am

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

9 pm news
9 pm news
author img

By

Published : Dec 25, 2020, 9:09 PM IST

ரஜினி விரைவில் குணமடைய விரும்புவதாக பவர்ஸ்டார் அறிக்கை

ரஜினிகாந்த் தைரியமுள்ளவர், அது மட்டுமில்லாது ஆன்மீகம் உள்ளவர். கடவுளின் ஆசீர்வாதங்களையும், அவர் வணங்கும் பாபாஜி ஆசீர்வாதங்களையும் பெற்று விரைவில் குணமடைய வேண்டும் என விரும்புவதாக தெலுங்கு நடிகர், ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் தவிர வேறு எந்த மாநிலத்திலும் விவசாயிகள் போராடவில்லை- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா? என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய நிலையில் அதற்கு, “பாஜக தலைமை தான் முடிவு செய்யும்” என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளித்தார்.

தமிழ்நாட்டில் நீளும் குழந்தைத் திருமணங்கள்... என்ன சொல்கிறது ஈடிவி பாரத் களஆய்வு?

தமிழ்நாட்டு மக்களிடையே குழந்தைத் திருமணங்கள் குறித்த விழிப்புணர்வு உள்ளதா, குழந்தைத் திருமணங்களைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் களஆய்வு மேற்கொண்டுள்ளது. அது குறித்து சிறப்புத் தொகுப்பு இதோ...

மத்தியப் பிரதேச உள்ளாட்சி தேர்தலில் ஓவைசி கட்சி போட்டி!

மக்களவை எம்பி அசாதுதீன் ஓவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி மத்தியப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறது.

அடிலெய்டு தோல்விக்கு பாடம் புகட்டும் முனைப்பில் இந்தியா!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான, அடிலெய்ட் முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பாடம் புகட்டும் வகையில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

கோவிட்-19 நிலவரம்: உலகளவில் 8 கோடியை நெருங்கும் கரோனா பாதிப்பு!

உலகளவில் ஏழு கோடியே 97 லட்சத்து 67 ஆயிரத்து 36 பேர் இதுவரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் அரைசதம் அடித்த வீரர் ஜான் எட்ரிச் காலமானார்!

ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் அரைசதம் அடித்த வீரர் ஜான் எட்ரிச் காலமானார். அவருக்கு வயது 83.

சாதி வாரியான கணக்கெடுப்பு அனைவருக்கும் நல்லது - அண்ணாமலை

ஈரோடு: தமிழ்நாட்டில் சாதி வாரியான கணக்கெடுப்பு அனைவருக்கும் நல்லது என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு நடத்தப்படுமா? - அமைச்சரின் பதில்

ஈரோடு: தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரி அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதால் 7.5% இட ஒதுக்கீட்டில் கூடுதலாக மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்து மதத்திற்கு மாறிய இஸ்லாமியருக்கு கொலை மிரட்டல்!

லக்னோ: ஜல்காரி நகரில் இந்து மதத்திற்கு மாறிய இஸ்லாமிய இளைஞர் ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக காவல்துறையிடம் தஞ்சமடைந்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.