ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - 5 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news @ 5 PM
Top 10 news @ 5 PM
author img

By

Published : Sep 27, 2020, 5:05 PM IST

'கரோனா காலத்தில் விவசாயத்துறை மிகவும் வலுப்பெற்றுள்ளது' - மோடி

வேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகள் தங்கள் வேளாண் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்கும் சுதந்திரத்தைப் பெற்றுள்ளனர் என பிரதமர் நரேந்திர மோடி 'மன் கி பாத்' உரையில் தெரிவித்துள்ளார்.

பெரியாரின் உருவச் சிலை அவமதிப்பு: கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி ராமதாஸ் வலியுறுத்தல்!

பெரியாரின் உருவச் சிலையை அவமதித்தவர்களை கைது செய்து, மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

திருமணத்தை தாண்டிய உறவால் விபரீதம்... ஸ்டியோ புகுந்து போட்டோகிராபர் வெட்டிப் படுகொலை

திருமணத்தை தாண்டிய உறவு விவகாரத்தில் காக்களூரில் பட்டப்பகலில் போட்டோகிராபரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனாவால் அதிகம் பாதிப்பு

சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 125 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 18.70 விழுக்காட்டினர் 30-39 வயது உடையவர்கள். சில நாள்களுக்கு முன் 50 முதல் 59 வயது உடையவர்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

கரோனாவிற்கு கணவரை பறிகொடுத்த பெண்: நெகிழவைத்த இறுதித் தருணம்!

திருப்பத்தூரில் கரோனாவிற்கு தனது கணவரான காவல் உதவி ஆய்வாளரை பறிகொடுத்த பெண், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சல்யூட் அடித்து நெகிழ வைத்தார்.

எஸ்.பி.பிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜய் ஆன்டனி!

படப்பிடிப்பில் இருக்கும் விஜய் ஆன்டனி மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

எஸ்.பி.பி மறைவுக்கு அஜித் ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை? - நெட்டிசன்கள் கேள்வி

எஸ்.பி.பி மறைவுக்கு நடிகர் அஜித் ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

'எஸ்பிபிக்கு நினைவு இல்லம் கட்டப்படும்’ - எஸ்பிபி சரண் தகவல்!

அப்பா நினைவாக அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என்று எஸ்பிபியின் மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

தோனியின் சாதனையை முறியடித்த அலிஸா ஹீலி!

ஆஸ்திரேலிய மகளிர் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்வுமன் அலிஸா ஹீலி, சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 92 விக்கெட்டுகளை கீப்பிங் முறையில் வெளியேற்றி சாதனைப் படைத்துள்ளார்.

ஐபிஎல் 2020: நேருக்கு நேர்...! கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஐபிஎல் தொடரில் இன்று (செப்.27) நடைபெறவுள்ள 9ஆவது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.