பதக்கத்தை குவிக்கும் இந்தியா; ஈட்டி எறிதலில் இரட்டைப் பதக்கம்
டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் தேவேந்திர ஜஜாரியா, சுந்தர் சிங் குர்ஜார் ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்று, இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை ஏழாக உயர்த்தியுள்ளனர்.
வரலாற்றுச் சாதனை: தங்கம் வென்ற முதல் பெண் அவனி லெகாரா
பாரா ஒலிம்பிக் தொடரின் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
PARALYMPICS: வெள்ளி வென்றார் யோகேஷ் கத்துனியா; இந்தியாவுக்கு 5ஆவது பதக்கம்
பாரா ஒலிம்பிக் வட்டு எறிதல் எஃப்-56 பிரிவில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளிப் பதக்கம் வென்று, டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கான ஐந்தாவது பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு: முதலமைச்சர் இன்று ஆலோசனை
அரசு உயர் அலுவலர்கள், மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 30) ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். இதில் பள்ளி, கல்லூரிகள் திறப்புகள் குறித்தும், அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சு.சுவாமியின் கருத்தைச் சுட்டிக்காட்டி பணமாக்குதல் திட்டத்தைச் சாடிய பிடிஆர்!
உள்கட்டமைப்பை குத்தகைக்குவிடும் 'பணமாக்குதல் திட்டம்' குறித்து மத்திய பாஜக அரசை கடுமையாகச் சாடியுள்ளார் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
HBD ஆனந்த் பாபு - மறக்க முடியுமா 'பூங்குயில் ராகமே' நாயகனை!
நடனத்தில் புதிய பாணியை உருவாக்கி 1980-களில் ரசிகர்களைத் தன்வசப்படுத்திய நாயகன் ஆனந்த் பாபு.
சென்னை ↔ இங்கிலாந்து விமான சேவை மீண்டும் தொடக்கம்
லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு தனது முதல் விமான சேவையை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நாளை (ஆகஸ்ட் 31) மீண்டும் தொடங்குகிறது.
ஓய்வு வரை ஸ்பேஸ் எக்ஸ் மீது வழக்கு தொடுப்பார் - ட்விட்டரில் எலான் மஸ்க் தாக்கு
"ஜெஃப் பெசோஸ் ஓய்வுபெற்ற பின்னர்தான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுப்பதை நிறுத்துவார் என்று நினைக்கிறேன்" என அமேசான் நிறுவனரை ஸ்பேஸ்-எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் ட்விட்டரில் சீண்டியுள்ளார்.
ராக்கெட் குண்டு தாக்குதல் - தொடர்ந்து குறிவைக்கப்படும் காபூல் விமான நிலையம்
காபூல் விமான நிலையம் அருகே சில தினங்களுக்கு முன் பெரும் வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டது. 100க்கும் மேற்பட்ட உயிர்களை காவுவாங்கிய இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து இன்றும் ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
புதிய ட்ரோன் விதிகள் 2021: வணிக செயல்பாடுகளின் புதிய நம்பிக்கை
உணவு டெலிவரி, மருத்துவ தேவைகள், வேளாண்மை என அனைத்திலும் தன் பங்கை உறுதிசெய்யவிருக்கிறது, ட்ரோன் தொழில்நுட்பம். ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய ட்ரோன் விதிகள் 2021 இதற்கெல்லாம் பெரும் வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என பொருளாதார வல்லுநர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.