இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சிறை அலுவலர் பதவி மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் வருகின்ற 9ஆம் தேதி முதல் 16ஆம் தேதிக்குள் அரசு வேலை நாள்களில் தங்களின் மூல சான்றிதழ்களை அரசு இ-சேவை மையங்கள் மூலம் ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட நாள்களுக்குள் பதிவேற்றம் செய்யவில்லையெனில் அந்த விண்ணப்பதாரர்களுக்கு இதில் கலந்துகொள்ள விருப்பம் இல்லை என கருதி அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியல் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் மற்றும் அரசு இ-சேவை மையங்களில் பட்டியல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரூர் காவிரி ஆற்றுப் பகுதியில் மணல் குவாரிகள் அமைப்பது தொடர்பான திட்டவரைவு வழக்கு முடித்துவைப்பு