இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு உத்தரவின்படி அக்டோபர் 2ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும். பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், பல்வேறு திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.
கீழ்வருமாறு பின்பற்ற வேண்டும்:
- கிராம சபைக் கூட்டம் ஊராட்சியின் எல்லைக்குள்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி அக். 2ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு கூட்டம் நடத்த வேண்டும்.
- தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், மக்கள் கலந்துகொள்ள ஏதுவாக கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
- கரோனா தடுப்பு வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
- கிராம சபைக் கூட்டமானது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் (Containment Zone) இருந்தால், வேறொரு நாளில் மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் நடத்த வேண்டும்.
- கிராம சபைக் கூட்டத்தில் வயதானவர்கள், கைக்குழந்தைகள் கலந்துகொள்ள கூடாது.
- கரோனா தொற்றுள்ளவர்கள் கிராம சபையில் கலந்துகொள்ளாததை உறுதிசெய்ய வேண்டும்.
- கிராம சபை பாதுகாப்பான பொது வெளியிலோ அல்லது காற்றோட்டமான கட்டடத்திற்குள்ளாகவோ நடத்த வேண்டும்.
- கிராம சபைக் கூட்டம் நடத்தவுள்ள பொதுவெளியில் கை சுத்தமாக்கும் கிருமிநாசினி ( Hand Sanitizer ) வசதி ஏற்படுத்திட வேண்டும் .
- கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
- கிராமசபைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள பொதுவெளியில் தகுந்த இடைவெளியைப் பின்பற்றிடும் பொருட்டு ஒவ்வொருவரும் அடி இடைவெளியில் அமர வேண்டும்.
- கிராம சபைக் கூட்டம் தொடர்பான அறிக்கையை அக்டோபர் 10ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிகார் தேர்தல் : சிறையிலிருந்தே வேட்பாளர் பட்டியலைத் தேர்வு செய்யும் லாலு