ETV Bharat / state

மத்திய தேர்வாணைய நேர்காணலுக்காக டெல்லி வரும் தமிழ்நாடு தேர்வர்களுக்கு இலவச பயிற்சி- தமிழக அரசு ஏற்பாடு

மத்திய குடிமைப்பணிகளுக்கான பிரதான தேர்வுகளில் தேர்ச்சி பெற்று நேர்காணலுக்காக டெல்லி வரும் தமிழ்நாடு தேர்வர்களுக்கு, புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் மூத்த ஆட்சிப்பணி அலுவலர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

TN Government
TN Government
author img

By

Published : Feb 16, 2020, 5:42 PM IST

தமிழ்நாட்டிலிருந்து எண்ணற்றத் தேர்வர்கள் மத்திய குடிமைப்பணிகள் தேர்வுகளை எழுதி வருகின்றனர். பிரதான தேர்வுகளில் வெற்றி பெறும் தேர்வர்கள் டெல்லி வந்து நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்கள், குறிப்பாக கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியவர்கள், பிரதான தேர்வுகளில் வெற்றி பெற்றால் டெல்லிக்கு வந்து நேர்காணல்களிலும், வெற்றிப்பெறுவது அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி தங்குமிடம், உணவு, பயிற்சிக்கு தயாராகத் தேவையான அம்சங்கள் உள்ளிட்டவை அவர்களுக்குத் தடையை ஏற்படுத்தும் நிலை தொடர்கிறது. இந்தச் சூழலில், இத்தகைய சிக்கலைத் தீர்க்க, தமிழ்நாட்டிலிருந்து வரும் தேர்வர்களுக்கு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் வசதி, பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக டெல்லி தமிழ்நாடு இல்லம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “இந்தியக் குடிமைப்பணிகளுக்கான பிரதான தேர்வில் தேர்ச்சிப் பெற்று மத்திய தேர்வாணையத்தின் நேர்காணல் தேர்வுக்கு, அழைப்பு அனுப்பப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு, ஆண்டுதோறும் தேர்வுக்காக டெல்லி வருகைதரும்போது, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் சலுகைக் கட்டணத்தில் தங்கும் அறைகள் தமிழ்நாடு அரசினால் வழங்கப்படுகிறது.

தேர்வர்களின் வசதிக்காக தேர்வு நாளன்று வாகன வசதிகள், தேர்வர்களுக்கு செய்திகளை தெரிந்துகொள்ளத் தேவையான நாளிதழ்கள், வார இதழ்கள் இணையதள இணைப்புடன் கூடிய கணினி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக மூத்த குடிமைப்பணி அலுவலர்கள் மூலமாக பயிற்சி நேர்காணல் (Mock Interview ) ஆலோசனை வகுப்புகளும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும், தமிழ்நாடு அரசு சார்பாக, தமிழ்நாடு அரசின் முதன்மை உள்ளுறை ஆணையாளர் (தமிழ்நாடு இல்லம்) ஹிதேஷ் குமார் எஸ் மக்வானா செய்துள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி நேர்காணலுக்காக, மூத்த மத்திய குடிமைப்பணி அலுவலர்கள் நெடுஞ்செழியன், அசோக் குமார், எம். சிபி சக்கரவர்த்தி, எல்.ஸ்டிபன், ஜெயசுந்தர், ராகுல் குமார், ராகேஷ் ஆகியோர் தேர்வர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைகளை தமிழ்நாடு இல்லத்தில் நேற்று (பிப்.15) வழங்கினர். தமிழ்நாடு அரசின் இம்முயற்சியால் சுமார் 200 தேர்வர்கள் இந்தாண்டு பயனடைவார்கள் என்று அரசுத் தரப்பு கூறியுள்ளது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு - பெண்கள் உட்பட மூன்று பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.