இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (செப் 16) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலின் படி, "தமிழ்நாட்டில் புதிதாக 82 ஆயிரத்து 644 நபர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களில் தமிழ்நாட்டிலிருந்த ஐந்தாயிரத்து 645 நபர்களுக்கும், அஸ்ஸாம், மேற்கு வங்கம், கர்நாடகா மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா இரண்டு நபர்களுக்கும், ஜார்கண்டில் இருந்து தமிழ்நாடு வந்த ஒருவருக்கும் என மொத்தம் ஐந்தாயிரத்து 652 நபர்களுக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் இதுவரை 59 லட்சத்து 40 ஆயிரத்து 944 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 5 லட்சத்து 19 ஆயிரத்து 860 நபர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது 46 ஆயிரத்து 633 நபர்கள் மட்டுமே மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் ஐந்தாயிரத்து 768 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 64 ஆயிரத்து 668ஆக அதிகிரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 57 பேர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்து 559ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் புதிதாக மேலும் 983 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர், செங்கல்பட்டு, கடலூர் திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் நோய் தொற்றினால் பாதிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு விவரங்கள்
சென்னை - 1,51,560
செங்கல்பட்டு - 31,388
திருவள்ளூர் - 29,198
கோயம்புத்தூர் - 23,702
காஞ்சிபுரம் - 19,959
கடலூர் - 17,097
மதுரை - 15,578
சேலம் - 15,341
தேனி - 13965
விருதுநகர் - 13817
திருவண்ணாமலை - 13,642
வேலூர் - 13,019
தூத்துக்குடி - 12,543
ராணிப்பேட்டை - 12,364
திருநெல்வேலி - 11,429
கன்னியாகுமரி - 11,311
விழுப்புரம் - 9847
திருச்சிராப்பள்ளி - 9114
தஞ்சாவூர் - 8751
கள்ளக்குறிச்சி - 8308
திண்டுக்கல் - 8065
புதுக்கோட்டை - 7721
தென்காசி - 6467
ராமநாதபுரம் - 5269
திருவாரூர் - 5678
திருப்பூர் - 5349
ஈரோடு - 4903
சிவகங்கை - 4625
நாகப்பட்டினம் - 4390
திருப்பத்தூர் - 3951
நாமக்கல் - 3673
கிருஷ்ணகிரி - 3395
அரியலூர் - 3343
நீலகிரி - 2596
கரூர் - 2327
தருமபுரி - 2322
பெரம்பலூர் - 1597
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்- 924
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்- 904
ரயில் மூலம் வந்தவர்கள்- 428