ETV Bharat / state

மாணவி சிந்துவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு!

author img

By

Published : May 25, 2022, 3:39 PM IST

மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் மாணவி சிந்துவை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே25) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மாணவி சிந்துவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

சென்னை: கோடம்பாக்கத்தில் வசித்து வரும் மாணவி சிந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தோழியுடன் விளையாடும்போது, மூன்றாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததால், இரண்டு கால்களிலும் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும், மாணவி சிந்துவின் முகத்தின் தாடை மற்றும் பற்கள் உடைந்தன.

இந்நிலையில், இம்மாணவிக்கு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு உயிரைக் காப்பாற்றினர். இரண்டு ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்த நிலையிலும், தொடர்ந்து மாணவி சிந்து தன்னம்பிக்கையுடன் படித்து +2 பொதுத்தேர்வு எழுதுவதற்கு அவரது தந்தை தேர்வு மையத்திற்குத் தூக்கிச்சென்றார். இச்செய்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்குச் சென்ற பிறகு, தேர்வு எழுத 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.

அவர் தேர்வு எழுதி முடித்த பிறகு ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அரசு செலவில் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் இன்று(மே25) சென்னை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மாணவி சிந்துவை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். மேலும், சிந்துவின் தந்தை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் தேநீர் கடை நடத்துவதற்கான அனுமதி ஆணையை வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:நீலகிரியின் நிலத்தையும், பழங்குடியின மக்களையும் அரசு பாதுகாக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.