திருவொற்றியூரைச் சேர்ந்த நாகார்ஜுனா(24) இவரது நண்பர் ரமேஷ்(29) இருவரும் திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கத்தில் தங்கி நொளம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் அக்கவுண்டன்டாக வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று வேலை முடிந்து நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில், அடையாளம்பட்டு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அம்பத்தூரைச் சேர்ந்த திருமூர்த்தி(25), இவரது தம்பி ஹரிகிருஷ்ணன்(19), ஆகியோரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் நாகார்ஜூணா, ரமேஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த திருமூர்த்தி, அரிகிருஷ்ணன் ஆகியோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவரிகளின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.