சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் அடிக்கடி செல்ஃபோன், பணம், ஏடிஎம் கார்டுகள் ஆகியவை திருடுப்போவதாக ரயில்வே காவலர்களுக்கு புகார் வந்துள்ளது.
இதனையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட ரயில்வே போலீசார், திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த வினோத், திருவொற்றியூரைச் சேர்ந்த நாகராஜ், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கிரிதரன், காசிமேட்டைச் சேர்ந்த சஞ்சய், மணலியைச் சேர்ந்த தினேஷ் ஆகிய 5 பேரைக் கைது செய்தனர்.
இவர்கள் தொடர்ச்சியாக ரயில் நிலையத்தை குறிவைத்து திருடி வந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. அவர்களிடமிருந்து 2 செல்ஃபோன்கள், 3000 ரூபாய் ரொக்கம், ஏடிஎம் கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.