சென்னை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி, மனைவியின் தங்கை, மாமியாருடன் வசித்துவந்தார்.
இந்நிலையில் நேற்று (மார்ச் 5) அந்நபரின் மனைவியும், மாமியாரும் வெளியே சென்றுள்ளனர். அப்போது மனைவியின் 19 வயதுடைய தங்கை வீட்டில் தனியாக இருந்தபோது அவரிடம் அந்நபர் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதையடுத்து வீட்டிற்கு வந்த சகோதரி, தாயிடம் நடந்ததைப் பற்றி இளம்பெண் கூறியுள்ளார். பின்னர் இது குறித்து அந்நபரின் மனைவி தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் அவரைத் தேடிவந்தனர்.
இதையடுத்து பெருங்களத்தூர் பகுதியில் பதுங்கியிருந்த நபரை கைதுசெய்த காவல் துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சிக்கியது 15 கிலோ தங்கம்!