ETV Bharat / state

'டெட்' தேர்வின் மாதிரி விடைகள் இணையத்தில் வெளியீடு!

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கான சரியான விடைகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம்
author img

By

Published : Jul 10, 2019, 5:08 PM IST

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2019 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 ஜூன் 8ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்–2 ஜூன் 9ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்நிலையில், வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான சரியான விடைகள் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இன்று வெளியிடப்படுள்ளது.

விடைக்குறிப்பின் மீது ஏதேனும் தவறுகள் இருந்தால் வரும் 15ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ உரிய ஆதாரங்களுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரிய அலுவலகத்தில் முறையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், மேற்கோள் புத்தகங்கள் மட்டுமே ஆதாரமாக அளிக்க வேண்டும். குறிப்பாக கையேடுகள், தொலைதூர கல்வி நிறுவன ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.

Intro:
தொலைத்தூர கல்வி நிறுவன ஆதாரம் ஏற்கப்படாது
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

Body:

சென்னை, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கான தற்காலிக விடைக்குறிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2019 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 (இடைநிலை ஆசிரியர் பணி) ஜூன் 8 ந் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் –2 ஜூன் 9 ந் தேதி அன்றும் நடத்தப்பட்டது.
தற்பொழுது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக விடைக் குறிப்புகள் பாட வல்லுநர்களால் தயாரிக்கப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஏதேனும் ஆட்சேபனை
தெரிவிக்க விரும்பினால் 15. 7.2019 மாலை 5:30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய
தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பெறும் வகையில் அஞ்சல் மூலமாகவோ ஒவ்வொரு விடைக்கும் தனித்தனியாக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள உரிய படிவத்தில் ஆதாரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு வினாவிற்கும் தவறாமல் தனித்தனியே
விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் , மேற்கோள் புத்தகங்கள் ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள் மற்றும் தொலைதூர கல்வி நிறுவன ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என அதில் கூறப்பட்டுள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.