சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை இன்று பிற்பகல் 2.45 மணி முதல் சுமார் 4 மணி வரை ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து 'திமுக பைல்ஸ்-2' ஆவணங்களை ஒரு பெரிய இரும்புப் பெட்டியில் வைத்து வழங்கியதோடு, அதற்கான அறிக்கை ஒன்றையும் ஆளுநரிடம் வழங்கினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக கே.அண்ணாமலை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது," தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர்கள் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தோம், அப்போது, திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ₹5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இன்று, @BJP4TamilNadu மூத்த தலைவர்களுடன், நமது மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு RN ரவி அவர்களைச் சந்தித்தோம்.
— K.Annamalai (@annamalai_k) July 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய,… pic.twitter.com/14Pj7Jjpvq
">இன்று, @BJP4TamilNadu மூத்த தலைவர்களுடன், நமது மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு RN ரவி அவர்களைச் சந்தித்தோம்.
— K.Annamalai (@annamalai_k) July 26, 2023
மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய,… pic.twitter.com/14Pj7Jjpvqஇன்று, @BJP4TamilNadu மூத்த தலைவர்களுடன், நமது மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு RN ரவி அவர்களைச் சந்தித்தோம்.
— K.Annamalai (@annamalai_k) July 26, 2023
மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய,… pic.twitter.com/14Pj7Jjpvq
தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை வரும் 28-ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 'என் மண் என் மக்கள்' என்ற தலைப்பில் பாதயாத்திரையைத் தொடங்கவுள்ளார். 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்த பாதயாத்திரையானது நடைபெறவுள்ளது. இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கவுள்ளார். அதோடு, இந்த யாத்திரையில் பங்கேற்க அதிமுக, பாமக, தேமுதிக, புதிய நீதிக்கட்சி என தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு கே.அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் பனிமய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
இந்த நிலையில், தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை ஆளும் கட்சியான திமுக தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுகவில் வாக்குச்சாவடிக் குழு, வாக்கு சேகரிப்பு குழு உள்ளிட்ட பணிகளைத் திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.
இதனிடையே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திடீரென ஆளுநரைச் சந்தித்து ஆலோசனை நடத்தியதோடு, திமுக தொடர்பான முறைகேடு பட்டியலை ஆளுநரிடம் வழங்கியுள்ள விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் அண்ணாமலை வெளியிட்ட 'திமுக பைல்ஸ்-1' விவகாரம் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அண்ணாமலைக்கு எதிராக திமுக எம்பி டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அந்த வழக்குகள் விசாரணை நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுபானங்கள் உயர்வுக்கு மகளிர் உரிமைத்தொகை தான் காரணமா? மதுவிலக்கு அமைச்சர் பதில்