ஓபிஎஸ், மா.பாஃ.பாண்டியராஜன் உள்ளிட்ட 11எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவிற்கு எதிராக வாக்களித்தனர். இதனால், இவர்கள் 11பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடா சக்கரபாணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சிக்ரி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்த நிலையில், அவர் ஓய்வுப் பெற்று விட்டதால், வேறு அமர்வுக்கு அமைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை விரைந்து விசாரிக்க கோரி திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சில், நீதிபதியிடம் முறையிட்டார். இதையடுத்து தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்க நீதிபதி ஒப்புதல் அளித்தார்.