ETV Bharat / state

ஆறு தனியார் பொறியியல் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம்!

சென்னை: தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஆறு தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் தன்னாட்சி அங்கீகாரம் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.

அண்ணா பல்கலைக் கழகம்
author img

By

Published : May 21, 2019, 7:47 PM IST

இது குறித்து, பதிவாளர் குமார் கூறுகையில், "அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் அங்கீகாரம் பெற்று தற்பொழுது 41 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரத்துடன் இயங்கி வருகிறது. தன்னாட்சி வழங்குவதால் கல்லூரியில் குறிப்பிட்ட வரையறைக்குள் தங்களின் பாடத்திட்டத்தை வகுத்துக் கொள்ளவும், தேர்வினை நடத்தவும், கல்வியின் தரத்தை உயர்த்தவும் முடியும்.

அதன் அடிப்படையில், சென்னை ஜெருசலேம் பொறியியல் கல்லூரி, வேல்டெக் மல்டி டெக் டாக்டர் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா பொறியியல் கல்லூரி, வேலம்மாள் பொறியியல் கல்லூரி, கோவை ஸ்ரீ சக்தி இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலாஜி, கோவை பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம், பி.ஏ.கல்லூரி ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலாஜி ஆகிய ஆறு பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகள் 2019 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் தன்னாட்சியுடன் செயல்படும்.

தன்னாட்சி பெற்ற கல்லூரியில் நடத்தப்படும் அனைத்து நடவடிக்கையினை கண்காணிக்க அண்ணாப் பல்கலைக் கழகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்கம், பல்கலைக் கழகத்தின் மானியக்குழுவில் இருந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்", என்றார்.

6 தனியார் பொறியியல் கல்லூரிக்கு
தன்னாட்சி அங்கீகாரம்

சென்னை,
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 6 தனியார் பொறியியல் கல்லூரிக்கு அண்ணாப் பல்கலைக் கழகம் தன்னாட்சி அங்கீகாரம் வழங்கி அனுமதி அளித்துள்ளது என அதன் பதிவாளர் குமார் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது, அண்ணாப் பல்கலைக் கழகம் கல்வித் தரத்தினை உயர்த்த மேற்கொள்ளும் பல முயற்சிகளில் சுயநிதி பொறியியல் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம் வழங்குவதும் ஒன்றாகும். தன்னாட்சி வழங்குவதால் கல்லூரியில் குறிப்பிட்ட வரையறைக்குள் தங்களின் பாடத்திட்டத்தை வகுத்துக் கொள்ளவும், தேர்வினை நடத்தவும், கல்வியின் தரத்தை உயர்த்தவும் முடியும்.
அண்ணாப் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்று தற்பொழுது 41 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரத்துடன் இயங்கி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஆட்சி மன்றக் குழுவின் 6 சுயநிதிப் பொறியியல் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் ஜெருசலேம் பொறியியல் கல்லூரி, வேல்டெக் மல்டி டெக் டாக்டர் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா பொறியியல் கல்லூரி, வேலம்மாள் பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூரில் ஸ்ரீ சக்தி இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியரிங் அன்டு டெக்னாலாஜி, கோயம்புத்தூர் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம், பி.ஏ.கல்லூரி ஆப் இன்ஜினியரிங் அன்டு டெக்னாலாஜி ஆகியவற்றுக்கு தன்னாட்சி அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்லூரிகள் 2019 ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் தன்னாட்சியுடன் செயல்படும். இதனால் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் பாடத்திட்டத்தினை வகுத்து மாணவர்களுக்கு கற்பிக்க முடியும். பாடத்திட்டத்தில் மதிப்பு கூட்டு பாடங்களையும், ஆன்லைன் மூலம் கல்வியும் கற்பிப்பதுடன், தேர்வினை சிறப்பாக நடத்த முடியும்.
மேலும் தன்னாட்சி பெற்ற கல்லூரியில்  நடத்தப்படும் அனைத்து நடவடிக்கையினை கண்காணிக்க அண்ணாப் பல்கலைக் கழகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்கம், பல்கலைக் கழகத்தின் மானியக்குழுவில் இருந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.