ETV Bharat / state

‘ஈழத் தமிழர்களுக்கு அனைத்து நிவாரண உதவிகளும் கிடைக்க வேண்டும்’ - சீமான்

author img

By

Published : Mar 28, 2020, 9:05 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கும் அத்தியாவசிய பொருள்களும் நிதி உதவிகளும் முகாமில் வசிக்கும் ஈழத் தமிழர் குடும்பங்களுக்கு கிடைக்கும்படி ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"தமிழ்நாட்டில் ஏறத்தாழ 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழச்சொந்தங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமில் போதிய இட வசதி இல்லாமல், நெருக்கடியுடன் சுகாதாரமற்ற நிலையில், கழிப்பிட வசதிகள் இல்லாமல், பழைய இடிந்த குடியிருப்புகளில் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே குடியிருப்புகளில் நோய் தொற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் தமிழ்நாடு அரசு உடனடியாக முகாமில் சுகாதார ஆய்வு செய்து போதிய அடிப்படை வசதிகளை உருவாக்கித் தருவதுடன் அவர்கள் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு பணிபுரிய வந்த பிற மாநிலத்தவருக்கு அத்தியாவசியப் பொருள்கள் இலவசமாக வழங்குவது குறித்து அறிவித்த தமிழ்நாடு அரசு, ஈழத் தமிழர்களுக்கு நிவாரண உதவிகள் அளிப்பது குறித்து எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியிடாதது மிகவும் வேதனைக்குரியதாகும்.

எனவே அரசு அறிவித்துள்ள அனைத்து அத்தியாவசிய பொருள்களும், நிதி உதவிகளும் முகாமில் வசிக்கும் ஈழத் தமிழர் குடும்பங்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். மத்திய அரசால் வழங்கப் பெறும் மூன்று மாதங்களுக்கான இலவச எரிவாயு உருளை, நிவாரண உதவிகள் கிடைப்பதற்கு தமிழ்நாடு அரசு ஆவணச் செய்திட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிரபாகரன் - விடுதலைக்காக ஏங்கும் மனிதர்களின் அடையாளம்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.