கரோனா பரவல் அதிகரித்து வருவதால் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதோடு, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வை எப்போது நடத்தலாம் என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கூட நடத்தப்படாதச் சூழலில், பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டதால், எந்த அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது தொடர்பாகவும், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், கல்வி கட்டணம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
இதையும் படிங்க:'வரும் 10ஆம் தேதி முதல் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடக்கம்' உணவுத்துறை அமைச்சர்!