பாமகவின் பசுமை தாயகம் அமைப்பு சார்பில் நடைபெற்ற காலநிலை அவசரநிலை பரப்புரை சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில்நிலையம் புறநகர் ரயில் முனையத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், அன்புமணி ஆகியோர், "காலநிலை மாற்றத்தால் புவி வெப்பமடைவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்து புவி வெப்பமடைவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பொதுமக்களும் தங்களின் பங்களிப்பை செய்திடல் வேண்டும்.
எதிர்காலத்தில் கடும் வறட்சியும், வரலாறு காணாத மழையும் பெய்யும் நிலை உள்ளது. அதுபோன்ற நிலைகளை சமாளிக்கும் முன் ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். எதிர்கால சந்ததிகளைக் காக்கவும், அனைவரும் ஒன்றிணைந்து புவி வெப்பத்தை குறைக்கவும் முன்வர வேண்டும். உலகத்திற்கே பேராபத்து ஏற்பட உள்ள இந்த பிரச்னைக்கு அனைவரும் தீர்வுகாண முன்வர வேண்டும்" என்றனர்.
இதையும் படிங்க: காலநிலை மாற்றத்தால் மாபெரும் ஆபத்தை சந்திக்க இருக்கும் இந்தியா!