சென்னை: போக்குவரத்துத்துறை துணை ஆணையரான சி.நடராஜன் அதிகாரத்தை பயன்படுத்தி அதிகமாக லஞ்சம்பெறுவதாக கடந்த 3 மாதங்களாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, வாகனங்களை புதுப்பிப்பதற்காக ஆவணங்களில் கையெழுத்திட லஞ்சம் பெறுவதாக அதிகப்படியான புகார்கள் எழுந்தன.
அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் எழிலகத்தில் உள்ள போக்குவரத்துத்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்த விவரங்கள் தெரியவரும் என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒரு ரூபாய் திட்டமானாலும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் - ஸ்டாலின்