சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் விஜய் சாலமன், கடந்த மாதம் 22ஆம் தேதி லயோலா கல்லூரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், பேராசிரியர் விஜய் சாலமனை வழிமறித்து மிரட்டி அவரது செல்ஃபோனை பறித்துச் சென்றனர்.
இது தொடர்பாக, விசாரணை நடத்தி வந்த நுங்கம்பாக்கம் காவல் துறையினர், வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தியாகராய நகரைச் சேர்ந்த அஸ்வின் குமார், பார்த்தசாரதி, விஜய் ஆகிய மூன்று பேரையும் சிசிடிவி காட்சிகளை வைத்து கைது செய்துள்ளனர்.
தி.நகர், நுங்கம்பாக்கம் பகுதிகளில் நடந்த மேலும் சில வழிப்பறி சம்பவங்களில் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.