சென்னையில் உள்ள புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.இராமச்சந்திரன் (சென்ட்ரல்) மத்திய ரயில் நிலையத்தில் பயணிகளின் செல்ஃபோன்கள் திருடுபோவதாக ரயில்வே காவல் துறையினருக்குத் தொடர்ச்சியாகப் புகார்கள் வந்துள்ளது. இதனால், காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த ஒரு நபரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், கோவையைச் சேர்ந்த பொன்னுதுரை (41) என்பவர் தான் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து, மூன்று செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது அவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: யாரும் இல்லை என நினைத்து டேபிள் திருடிய நபர்; காட்டிக்கொடுத்த நிழல்!