தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்றார் போல் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே.8) தமிழ்நாட்டிற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினார்.
தற்போது அவரது கோரிக்கையை ஏற்று 220 டன்னாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ஆக்ஸிஜன் அளவை 419 டன்னாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆக்சிஜன் செறிவூட்டிகள் கையிருப்பு உள்ளது’ - நாகை மாவட்ட ஆட்சியர்