இணைய வழி வணிகத்தை ஓஎல்எக்ஸ் நிறுவனம் மூலம் போலியாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாக கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நரேஷ்பால் சிங், பச்சு சிங் ஆகியோரை தமிழ்நாடு காவல் துறையினர் கைது செய்து சென்னைக்கு அழைத்துவந்தனர்.
அவர்கள் இருவரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் இன்று முன்னிறுத்தினர். இவர்கள் மீது, வங்கி மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.