ETV Bharat / state

நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அதிகரிப்பு!

author img

By

Published : Jul 22, 2019, 9:02 AM IST

Updated : Jul 22, 2019, 11:14 AM IST

சென்னை: பள்ளிக் கல்வித் துறையால் அளிக்கப்பட்டுவரும் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அதிகரிக்கப்பட்டு இந்த ஆண்டு முதல் 506 இடங்களில் பயிற்சி தொடங்கப்பட உள்ளது.

neet

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி இரண்டு ஆண்டுகளாக பள்ளிக் கல்வித் துறையின் மூலம் அளிக்கப்பட்டுவருகிறது. இந்தப் பயிற்சியின் மூலம் படிக்கும் மாணவர்களில் இதுவரை ஐந்து பேர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் நீட்,ஜே.இ.இ., சி.ஏ. போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வகையில் தமிழ்நாடு அரசால் தனித்துவம் வாய்ந்த பயிற்சி அளிக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார்.

2019-20ஆம் கல்வியாண்டில் நீட், ஜே.இ.இ., போட்டித் தேர்வுகளுக்கு அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் பயிற்சி தொடங்கப்பட உள்ளது.

ஏற்கனவே 412 மையங்களில் பயிற்சி அளித்துவரும் நிலையில், மேலும் இந்த ஆண்டு கூடுதலாக 94 பயிற்சி மையங்களில் நீட் போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், 11ஆம் வகுப்பு மாணவர்கள் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

மேலும் இதர வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 60 விழுக்காடு மதிப்பெண்களும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் 50 விழுக்காடு மதிப்பெண்கள் கொண்டும், 12ஆம் வகுப்பில் 50 மாணவர்களும், 11ஆம் வகுப்பில் 20 மாணவர்களும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

ஜே.இ.இ. போட்டித் தேர்வு ஆங்கில வழியில் மட்டும் நடைபெறுவதால், இதற்கு ஆங்கில வழி பயிற்சி மையங்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். மேலும், இது நேரடி பயிற்சி வகுப்புகளாகவும் நடத்தப்படும். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாட ஆசிரியர்கள் பயிற்சி மையங்களில் மாணவர்களுக்கு கற்பிப்பார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Intro:பள்ளிக் கல்வித் துறையின் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அதிகரிப்புBody:சென்னை,
பள்ளிக் கல்வித் துறையால் அளிக்கப்பட்டு வரும் நீட் தேர்வு பயிற்சி மையங்களை அதிகரித்து 506 இடங்களில் இந்த ஆண்டு துவக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிக்கல்வித் துறையின் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இளநிலை மருத்துவப் படிப்பில் அதிக அளவில் சேர்வார்கள் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு பயிற்சியில் படித்த மாணவர்கள் 5 பேர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர்.

எனவே இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான பயிற்சியை ஆகஸ்ட் முதல் துவக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் நீட்,ஜெஇஇ,சிஏ போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வகையில் தமிழக அரசால் தனித்துவம் வாய்ந்த பயிற்சி அளிக்கப்படும் என அறிவித்தார். வாக்கின் அடிப்படையில் இந்தப் பயிற்சிகள் நடத்தப்படுகிறது.

2019-20 ம் கல்வியாண்டில் நீட் ,ஜெஇஇ போட்டித் தேர்வுகளுக்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 ,12 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இம்மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் எண்ணிக்கைக்கு ஏற்ப ஏற்கனவே 412 பயிற்சி மையங்கள் தேர்வு செய்யப் பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும் இந்த ஆண்டு கூடுதலாக 94 பயிற்சி மையங்களில் நீட் போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சிக்கான தமிழ் மற்றும் ஆங்கில மாணவர்களுக்கு தனித்தனியாக அளிக்கப்படும்.

நீட் ,ஜெஇஇ போட்டி தேர்விற்கு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், பதினோராம் வகுப்பு மாணவர்கள் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட வேண்டும். மேலும் இதர வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த மாணவர்கள் 60 சதவீத மதிப்பெண்களும், ஆதிதிராவிடர் ,பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண்கள் கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பில் 50 மாணவர்களும், பதினோராம் வகுப்பில் 20 மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

ஜெஇஇ போட்டித் தேர்வு ஆங்கில வழியில் மட்டும் நடைபெறுவதால் இதற்கு ஆங்கில வழி பயிற்சி மையங்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
மேலும் நேரடி பயிற்சி வகுப்புகளாகவும் நடத்தப்படும்.

இயற்பியல், வேதியியல், தாவரவியல் ,விலங்கியல் பாட ஆசிரியர்கள் பயிற்சி மையங்களில் மாணவர்களுக்கு கற்பிப்பார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

Conclusion:
Last Updated : Jul 22, 2019, 11:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.