ETV Bharat / state

பத்திரிகையாளர் அன்பழகன் கைதிற்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்!

author img

By

Published : Jan 12, 2020, 7:07 PM IST

சென்னை: பத்திரிகையாளர் அன்பழகனை கைது செய்ததற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

milk-association-demands-to-release-of-journalist-anpalagan
milk-association-demands-to-release-of-journalist-anpalagan

மூத்த பத்திரிகையாளரும், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவரும், மக்கள் செய்தி மய்யம் ஆசிரியருமான அன்பழகன் சென்னையில் நடைபெற்றுவரும் புத்தக திருவிழாவில் அரங்கு 101இல் அதிமுக தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பல்வேறு அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத் தகுந்த ஆதாரங்களுடன் கூடிய ஆவண புத்தகம் ஒன்றை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது காவல்துறை பொய் வழக்கு பதிந்து இன்று (12.01.2020) காலை கைது செய்துள்ளனர்.

அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களையும், அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் செய்கின்ற ஊழல்களையும், தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சம் போட்டுக் காட்டுபவர்களையும் முடக்குவதற்காக தொடர்ந்து காவல்துறையை ஏவல்துறையாக மாற்றி கைது நடவடிக்கைகளை மேற்கொள்கிறது அரசு என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பால் முகவர்கள் தொழிலாளர் சங்கம் சார்பாக, உடனடியாக எந்தவித நிர்பந்தமுமின்றி பத்திரிகையாளர் அன்பழகனை விடுதலை செய்ய வேண்டும் என காவல்துறையை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகையாளர்களை காவல்துறையினர் மூலம் மிரட்டுவதால் உண்மையை முடக்கிவிடலாம், ஆட்சியாளர்களின், அதிகாரவர்க்கத்தின் ஊழல்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் கவனத்திற்கு போக விடாமல் தடுத்து விடலாம் என்று நினைப்பது ’சூரியனை உள்ளங்கைக்குள் மறைக்க நினைக்கும் அறிவீனம்’ என்பதை உணர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திராவிட அரசியல் சரியான திசையில் செல்லவில்லை: கமல்ஹாசன்

Intro:Body:

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 12.01.20

"சூரியனை உள்ளங்கைக்குள் மறைக்க நினைக்கும் அறிவீனம்" மூத்த "பத்திரிகையாளர் கைது" குறித்து பால் முகவர்கள் சங்கத் தலைவர் கண்டனம்...

பால் முகவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
மூத்த பத்திரிகையாளரும், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவருமான, மக்கள் செய்தி மையம் ஆசிரியருமான அன்பழகன் சென்னையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் அரங்கு 101ல் அதிமுக தலைமையிலான தமிழக அரசில் இடம்பெற்றுள்ள பல்வேறு அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை தகுந்த ஆதாரங்களுடன் கூடிய ஆவண புத்தகமாக விற்பனை செய்ததால் கோபமுற்ற ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கமும் கூட்டாக இணைந்து அவர் மீது பொய் வழக்கு பதிந்து, அவரை இன்று (12.01.2020) காலை சுமார் 6.00மணியளவில் கைது செய்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.

அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களையும், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் செய்கின்ற ஊழல்களை தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சம் போட்டுக் காட்டுபவர்களையும் முடக்குவதற்காக தொடர்ந்து காவல்துறையை ஏவல்துறையாக மாற்றி கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். உடனடியாக எந்த வித நிர்ப்பந்தமும் இன்றி பத்திரிகையாளர் அன்பழகனை விடுதலை செய்ய வேண்டும் எனவும் காவல்துறையை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகையாளர்களை காவல்துறையினர் மூலம் மிரட்டுவதால் உண்மையை முடக்கி விடலாம், ஆட்சியாளர்களின், அதிகாரவர்க்கத்தின் ஊழல்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் கவனத்திற்கு போக விடாமல் தடுத்து விடலாம் என்று நினைப்பது "சூரியனை உள்ளங்கைக்குள் மறைக்க நினைக்கும் அறிவீனம்" என்பதை ஆட்சியாளர்களும், சம்பந்தப்பட்ட அதிகாரவர்க்கமும் உணர வேண்டும்.

காவல்துறை ஆட்சியாளர்களுக்கு எடுப்பார் கைப்பிள்ளையாக இல்லாமல் நேர்மையான துறையாக, மக்களின் நண்பனாக தொடர்ந்து நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்பதையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அழுத்தமாக பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்..

tn_che_05_milk_association_demands_to_release_of_journalist_anpalagan_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.