சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பூண்டி மற்றும் புழல் ஏரிகள் திறக்கப்பட்டதால் மணலி புதுநகர், திருவொற்றியூர் சடையன்குப்பம், கார்கில் நகர் ஆகிய பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
புழல் ஏரியில் கடந்த 4 நாள்களாக 1,500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மஞ்சம்பாக்கம், வடபெரும்பாக்கம் மற்றும் மாதவரம்-எண்ணூர் விரைவு சாலையை ஒட்டிய பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
இந்நிலையில் மணலி விரைவு சாலையை ஒட்டியுள்ள ஆற்றுப்பாதை முழுவதும் தண்ணீர் செல்கிறது. இந்த வெள்ளம் மணலி விரைவு சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து தேங்கியுள்ளது. இதனால் கனரக வாகனங்கள் மட்டுமே இந்தச் சாலையில் செல்கின்றன. மற்ற வாகனங்கள் நீரில் நத்தைப் போல் ஊர்கின்றன.
இதையும் படிங்க: தனித்தீவான பட்டாபிராம்; மிதவைகள் மூலம் பொதுமக்கள் பயணம்!