இன்று முதல் அமலுக்கு வருகிறது ஆவின் பால் விலை குறைப்பு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்த ஆவின் பால் விலை குறைப்பு உத்தரவு, இன்று(மே.16) முதல் அமலுக்கு வருகிறது.
பைக் வாங்க வைத்திருந்த பணம்: கரோனா நிதிக்கு வழங்கிய மாணவன்!
இருசக்கர வாகனம் வாங்குவதற்காக சேர்த்து வைத்திருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை கரோனா நிதியாக வழங்கிய 11ஆம் வகுப்பு மாணவனுக்கு, விரைவில் இருச்சகர வாகனம் வாங்கித் தருவேன் என அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார்.
'மூதாட்டியை உயிருடன் கடித்து தின்ற தெரு நாய்கள் கூட்டம்' பெங்களூரில் அதிர்ச்சி!
பெங்களூரு: பசிக்கொடுமையில் சாலையில் படுத்திருந்த மூதாட்டியை, தெரு நாய்கள் கும்பலாகக் கடித்து தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள் அரசு மருத்துவமனையை கண்டித்து புகார்!
சேலம்: செவிலியர் பயிற்சி மாணவிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படாததைக் கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
'தனியார் மருத்துவமனைகள் மனசாட்சியோடு செயல்பட வேண்டும்' அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
கரோனா நோயாளிகளிடம் கட்டணம் வசூலிப்பதில் தனியார் மருத்துவமனைகள் மனசாட்சியோடு செயல்பட வேண்டும் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் ஆய்வு: காத்திருந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உத்தரவு!
சேலம்: அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சையளிக்கும்படி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.
அரசு மருத்துவமனைக்கு 6 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கிய தன்னார்வலர்கள்!
சிவகங்கை: காரைக்குடி நகராட்சி அரசு மருத்துவமனைக்கு தமிழக மக்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் 6 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கபட்டது.
'விலை இல்லா உணவு... பசித்தோர் பசியாறலாம்'- பிரியாணி கடை உரிமையாளரின் மனிதநேயம்!
'விலை இல்லா உணவு பசித்தோர் பயன்படுத்திக் கொள்ளவும்' என்ற வாசகத்துடன் தங்களின் கடைக்கு முன்னால் உணவு பொட்டலங்களை வைத்து, வறியவர்களின் பசியை ஆற்றி வரும் திண்டுக்கல் முஜிப் பிரியாணி கடை உரிமையாளர்களின் செயல் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
பெண்ணின் சிறப்பை காபி பொடியில் ஓவியமாக உணர்த்திய கல்லூரி மாணவி!
உலக குடும்பத் தினத்தில், பெண்ணின் சிறப்பை காபி பொடியில் சுமார் 12 மணி நேரம் ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கீர்த்திகா.
விஜய் ரசிகர்களின் செயலால் வியந்துபோன மருத்துவ நிர்வாகம்!
மயிலாடுதுறை: அரசு மருத்துவமனையில் அவசர ஊர்திகள் பற்றாக்குறை காரணமாக மகப்பேறு, விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இரண்டு கார்கள் வழங்கியுள்ளனர்.