ETV Bharat / state

தேர்தல் களம் 2021: சசிகலா விடுதலை பேச்சுகளால் அதிமுகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பு!

author img

By

Published : Jan 14, 2021, 11:00 AM IST

Updated : Jan 14, 2021, 11:36 AM IST

சசிகலாவை தவறாகப் பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது, எங்கே இருந்தாலும் நாங்கள் அவரை போற்றுவோம் என்று முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா சென்னையில் நடந்த போராட்டத்தில் தெரிவித்துள்ளார். வரும் 27ஆம் தேதி சசிகலா சிறையில் இருந்து வெளியாக உள்ள நிலையில் அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள கோகுல இந்திரா, சசிகலாவுக்கு ஆதரவாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

election-2021-aiadmks-fuss-over-sasikalas-release

சென்னை போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய கோகுல இந்திரா, “சசிகலா ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர் என்றும் ஜெயலலிதாவுடன் துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் என்றும் கூறினார்.

வயதில் மூத்த ஒருவரிடம் மரியாதை நிமித்தமாக காலில் விழுந்ததை தவறாக விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று உதயநிதி ஸ்டாலினுக்கு அதிமுக செய்தி தொடர்பாளர் கோகுல இந்திரா கண்டனத்தை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் என்றும் பாராமல் ஒருமையில் பேசிவருவது கண்டுக்கத்தக்கது. கனிமொழி, ஆ. ராசா மீது 2ஜி வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இதனால் அவர்களும் குற்றவாளிகளாகதான் உள்ளனர். அதனால் முதலமைச்சரை பற்றி விமர்சிக்க திமுகவினருக்கு தகுதியில்லை. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தொடர்ந்து திமுக நடத்தும் கிராம சபை கூட்டங்களில் திமுக தலைவர் பெண்கள் முன்பு அநாகரீகமாக நடந்துவருகிறார். பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் வன்முறையை கையாண்டு வெளியேற்றுகிறார்.

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த அம்மாவை பற்றியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பற்றியும் இழிவாக பேசியது கண்டிக்கத்தக்கது. அவர்களை மட்டுமல்லாது பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேச யாருக்கும் உரிமையில்லை. அம்மா என்ற காரணத்தால் மரியாதை நிமித்தமாக ஆசிர்வாதம் வாங்க காலில் விழுவது வழக்கம். அந்த நிகழ்வை பற்றி விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார். திமுக தலைவர் முன்னிலையில் சட்டப்பேரவை உறுப்பினர் கீழ்தரமான வார்த்தையால் பேசியதையும் கண்டுக்கொள்ளாமல் உள்ளார்.

அதிமுகவில் இது போன்று பேசியிருந்தால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்கள். பெண்களை பற்றி இழிவாக யார் பேசினாலும் அரசியல் பாராமல் கண்டிப்போம். அரசியலை அரசியலாக எதிர்கொள்ள தயார். ஆனால் தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.

அதிமுகவில் இருந்து கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் சசிகலா ஒதுக்கி வைக்கப்பட்டார், அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இந்நிலையில், சசிகலாவை தவறாகப் பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது, எங்கே இருந்தாலும் நாங்கள் அவரை போற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதன்பின் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த 9ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, “தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுக, அதிமுகவிற்கு மட்டுமே நேரடி போட்டி. தேசிய கட்சிகள் தமிழ்நாட்டில் ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் நடைபெறவுள்ள தேர்தலில் வெறுமனே சிரித்துக்கொண்டே விளையாடுவர். ஜல்லிக்கட்டு போன்ற தேர்தல் களத்தில் திமுகவிற்கும், அதிமுகவுக்கும் இடையே தான் நேரடி போட்டி எனத் தெரிவித்தார்.

வாரிசு அரசியலுக்கு வருகிற சட்டமன்ற தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதிமுக ஐடி பிரிவு சிறப்பாக செயல்படுகிறது. அவர்கள் மேலும் சிறப்பாக செயல் பட வேண்டும். சசிகலா வெளியே வந்தால் அதிமுக இரண்டாக, நான்காக உடையும் எனக் கூறுகிறார்கள். ஆனால் அதிமுகவில் ஸ்லீப்பர் செல்களே இல்லை. சசிகலா வெளியே வந்தால் ஒன்றும் நடக்கப்போவதில்லை” என்று தெரிவித்தார்.

இதையடுத்து அன்று மாலை நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “ராணுவ கட்டுப்பாடு உள்ள ஒரு மாபெரும் இயக்கம் அதிமுக. வரவுள்ள 2021 சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி, ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கண்டிப்பாக தேர்தலில் வெற்றி பெற்று மறுபடியும் முதலமைச்சர் பதவியில் அமர்வார். சசிகலா சிறையிலிருந்து தண்டனை காலம் முடிந்து வெளியே வர உள்ளார் என்று கேட்ட கேள்விக்கு? சசிகலா வெளிவருவதால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. குறித்தபடி தேர்தல் நடவடிக்கை அத்தனையும் நடைபெற்று வருகிறது. அதிமுக அரசு பெரும் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

பின்னர் அதிமுக தேர்தல் பணிக்குழு பொருப்பாளருமான பொன்னையன் கூறுகையில், “கட்டாயமாக 2021இல் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்ற நிலையை உருவாக்குவோம். கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியதற்கு தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று கேட்ட கேள்விக்கு தொண்டர்களின் எண்ணத்தின் அடிப்படையில் தான் அப்படி நடக்கிறது என்று தெரிவித்தார்.

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அணு அளவும் அதிமுகவின் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனத் தெரிவித்தார்.

அதன்பின் திமுக தலைவர் ஸ்டாலினை முதலமைச்சராக விடமாட்டேன் என்று முக அழகிரி கூறியதற்கு திமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பொன்னையன், சொந்த ரத்தத்தில் அப்படிப்பட்ட ஒரு துடிப்பான எதிர்ப்பு இருக்கிறது. அதிமுகவின் அபார செல்வாக்கை அடுத்து ஆட்சிக்கு வரும் என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா நிழலாக எடப்பாடி பழனிசாமியை தொண்டர்களும், மக்களும் பார்க்கிறார்கள் என்பதுதான் என் நிலைப்பாடு” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் கோகுல இந்திராவின் சசிகலா குறித்த கருத்திற்கு அதிமுக செய்தி தொடர்பாளர் சிவசங்கரியிடம் தொலைபேசி வாயிலாக கேட்டபோது, “சசிகலா குறித்து கோகுல இந்திரா பேசியது தனிப்பட்ட கருத்தாகவே பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு பெண்ணை பற்றி தவறாகப் பேசிய காரணத்தால் அவர் அவ்வாறு பேசி உள்ளார். சசிகலா தற்போது அதிமுக கட்சியை அல்லாத ஒரு பெண்மணியாக மட்டுமே பார்த்து இத்தகைய கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் உதயநிதி ஸ்டாலின் ஒரு பெண்ணை அவதூறாக பேசும் நோக்கத்தில் கருத்து பகிரப்பட்ட காரணத்தால், ஒரு பெண்ணாக மற்றொறு பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்து கோகுல இந்திரா பேசியுள்ளார். சசிகலாவை கட்சி ரீதியாக பார்க்காமல் ஒரு பெண்ணாக பாவித்து தன்னுடைய கருத்தை பெண்ணுக்கு ஏற்படும் அநீதிக்கு எதிராகவே அவர் இக்கருத்தை பேசியுள்ளார். எனினும் கட்சி அல்லாத தனி நபரை விமர்சனம் செய்யவும் பாராட்டவும் கூடாது என்றும், இது கட்சிக்கும், கொள்கைக்கும் ஏற்புடையது அல்ல என்றும்” தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சசிகலா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவுடன், தற்போது அதிமுகவில் அமைச்சர்களாக உள்ள ஆர். பி. உதயகுமார், காமராஜ், ஓ.எஸ். மணியன், செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய மூத்த அமைச்சர்கள் சசிகலாவின் விசுவாசிகளாக மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவில் உள்ள சசிகலா தரப்பு ஆதரவாளர்கள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. ஏனெனில் இன்னும் அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் அமைச்சர்கள் சசிகலா விடுதலை அடைந்த பின்பு தங்கள் கருத்துகளை வெளிப்படையாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே சிறிது கலக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ‘அதிமுகவும், பாஜகவும் மூழ்கும் கப்பல்கள்’- சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்!

Last Updated : Jan 14, 2021, 11:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.