கரோனா பரவலை அடுத்து சென்னை முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் நகரின் முக்கியச் சாலைகள், மேம்பாலங்கள் பேரிகார்டு கொண்டு மூடப்பட்டன. 3000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அத்தியாவசிய தேவைகளுக்குச் செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. குறிப்பாக மருத்துவச் சேவை, தூய்மைப் பணியாளர், உணவக ஊழியர்கள் ஐடி கார்டு உடன் அனுமதிக்கப்பட்டனர்.
எழும்பூர், சென்ட்ரல் ரயில்களில் பயணம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கல்யாணம் போன்ற நிகழ்வு செல்பவர்கள் பத்திரிகை காட்டினால் காவல் துறையினர் அனுமதி வழங்கினர்.
வாக்கு எண்ணும் மையங்களில் அரசியல் கட்சியினர் செல்ல ஐடி கார்டு உடன் அனுமதிக்கப்பட்டனர்.
பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. பார்சல் மட்டுமே வழங்கும் வகையில் ஒரு சில உணவகங்கள் மட்டும் செயல்பட்டன. அம்மா உணவகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வளிமண்டல சுழற்சி: ஏப்ரல் 28ஆம் தேதிவரை லேசான மழைக்கு வாய்ப்பு!