ETV Bharat / state

’கருத்து மோதல்களை தேர்தலோடு மறந்து சகோதர உறவுகளாக வேண்டும்’ - ஸ்டாலின்

author img

By

Published : Apr 9, 2021, 1:16 PM IST

”எத்தனை கருத்து மோதல்கள் தேர்தல் களத்தில் இருந்தாலும், தேர்தலோடு அவற்றை மறந்து மக்கள் அனைவரும் சகோதரர்களாக, சமூக நல்லிணக்கத்துடன் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்” - திமுக தலைவர் ஸ்டாலின்

dmk leader MK Stalin condemns election clash near Arakkonam

அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் அர்ஜுனன், சூரியா ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் அர்ஜுனன், சூரியா ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் என்பது ஜனநாயகத்தில் நடைபெறும் ஒரு திருவிழா. அதில் அனல் பறக்கும் பரப்புரைகள் செய்வதும், ஆக்கப்பூர்வமான முறையில் கருத்துப் பரிமாற்றங்கள் செய்வது மட்டுமே பொது அமைதிக்கு வலு சேர்க்கும். தேர்தல் நேரத்தில் நடைபெற்ற மோதல், தற்போது சாதிய வன்மத்துடன் இருவர் கொலை செய்யப்பட்டுள்ள அவலத்தில் முடிந்திருப்பது கண்டனத்திற்குரியது. கொலை செய்யப்பட்ட இருவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு அமையும் வரை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது அமைதிக்கு பங்கும் விளைந்து மக்களின் நிம்மதியைக் குலைக்கும் நடவடிக்கைகள் அரங்கேற அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

எத்தனை கருத்து மோதல்கள் தேர்தல் களத்தில் இருந்தாலும், தேர்தலோடு அவற்றை மறந்து மக்கள் அனைவரும் சகோதரர்களாக, சமூக நல்லிணக்கத்துடன் மாநிலத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

எனவே, தமிழ்நாட்டின் காவல்துறைத் தலைவர் உடனடியாக இதில் தலையிட்டு, மாவட்டக் காவல் துறை அவரவர் பகுதிகளில் சட்டம் - ஒழுங்கு பணிகளை நிலைநாட்டுவதில் எவ்வித சுணக்கமும் காட்டக் கூடாது என்றும், சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து, சட்டத்தின் முன்பு நிறுத்திட வேண்டும் எனவும் அறிவுறுத்திடுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.