சென்னை கூவம் ஆற்றில் நீர் தேங்காமல் இருக்க இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணியை பொதுப்பணி துறை தொடங்கியுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறுகையில், தூர்வாரும் பணிகள் குறிப்பிட்ட இடங்களில் நடைபெறுகின்றன. இதன் மூலம் கூவம் ஆற்றில் உபரி நீரோட்டம் தங்கு தடையின்றி கடலில் கலக்கும்.
அடையாறு ஆற்றிலும் வெகு விரைவாக தூர்வாரும் பணிகள் தொடங்கப்படும். கழிவுநீர் கலப்பது பற்றி சென்னை குடிநீர் வழங்கல் வாரியம், சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும். இரண்டு ஆறுகளின் கரைகள் இந்த ஆண்டு நன்கு பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கடந்த ஆண்டில் இந்த பணிகளை செய்ததால் தான், வடகிழக்கு பருவமழையின் போது எந்தவித உடைப்பும் ஏற்படாமல் இருந்தது. ஏற்கனவே ஆற்றின் குறுக்கே ஆங்காங்கே வலைகள் கட்டப்பட்டிருக்கின்றன. இதனால் கழிவுப்பொருள்கள் தேங்கி அதனை சுமூகமாக சேகரித்து அகற்றப்படுகிறது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஏழுமலையான் வேடத்தில் கைலாச நாட்டு உரிமையாளர்: ட்ரெண்டிங் ஆகும் நித்தி!