ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க, புதிய வகை வீல் சேர் அறிமுகம்! - new wheel chair for physically challenged people

சென்னை: ஐஐடி, தனியார் நிறுவனங்கள் இணைந்து மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்கும் வகையில் புதிய வீல் சேரை அறிமுகம் செய்துள்ளனர்.

wheel chair
author img

By

Published : Nov 5, 2019, 7:51 PM IST

மாற்றுத்திறனாளிகள் வீல்சேரினை பயன்படுத்தி தங்களின் அன்றாட பணிகளைத் தாங்களாகவே செய்து வருகின்றனர். அவர்களை வீல் சேரில் உட்கார வைத்த பின்னர் தான், அந்த சேரினைப் பயன்படுத்த முடியும். மேலும் வீல் சேரிலிருந்து எழுந்து நடக்கவோ, வேறு பணிகளை மேற்கொள்ளவும் சிரமப்படுவர்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நீண்ட நேரம் அமர்ந்த நிலையில் இருப்பதால் ரத்த ஓட்டத்தில் பிரச்னை போன்ற வேறுவிதமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளன. இதனைத் தவிர்க்கும் வகையில் சென்னை ஐஐடி, இந்தியாவிலேயே முதன் முறையாக எழுந்து நிற்கும் வீல் சேரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் மாற்றுத்திறனாளி ஒருவர் யாருடைய உதவியுமின்றி உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்து நிற்க முடியும். மீண்டும் அதே நிலையில் அவர்களால் உட்கார முடியும். இந்த வீல் சேருக்கு "அரைஸ்" என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் புதியவகை வீல் சேரை மத்திய சமூக நலத் துறை அமைச்சர் தாவர் சந்த் கெஹ்லோத் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் பேசிய அவர், "குறைந்த விலையில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் வாங்கக் கூடிய வகையில் இதன் விலை இருந்தாலும், அதனை மேலும் விலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தி புதிய வகை வீல் சேரைக் குறைந்த விலைக்கு வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இந்த புதிய வகை வீல் சேரைப் பயன்படுத்திய சென்னையைச் சேர்ந்த அசோக் என்பவர் கூறுகையில், "முதுகு தண்டுவட பிரச்னையால் பாதிக்கப்பட்ட, தனக்கு இந்த புதிய வீல் சேரைப் பயன்படுத்தியதன் மூலம் உடற்பயிற்சி செய்ய முடிகிறது. மேலும் தானாக எழுந்து பணிகளைச் செய்ய முடிவதால் மகிழ்ச்சியாக உள்ளது. உட்கார்ந்த வகையிலான வீல் சேரில் இருந்தபோது, எனது குழந்தையை யாராவது தூக்கி கொடுத்தால் மட்டுமே கொஞ்ச முடியும். ஆனால், தற்போது நானே குழந்தையைத் தூக்கி கொஞ்சுவது சந்தோஷமாக உள்ளது. இதனை குறைவாக விலையில், அனைவரும் வாங்கக்கூடிய வகையில் தான் தயாரித்துள்ளனர்" என்றார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய வீல் சேர் அறிமுகம்

ஐஐடி பேராசிரியர் சுஜாதா சீனிவாசன் கூறுகையில், "இந்த சேர் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய வகை வீல் சேரில் மோட்டார் பொருத்துவது என்பது எளிதானது. இதற்கான தேவை அதிகரிக்கும் போது விலை மிகவும் குறையும்" என்றார்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் மொழியில் உரையாடி அசத்திய அமைச்சர்!

Intro:மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க
புதிய வகை வீல் சேர் அறிமுகம்

Body:மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க
புதிய வகை வீல் சேர் அறிமுகம்

சென்னை,

சென்னை ஐஐடி மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்கும் வகையில் புதிய வீல் சேரை அறிமுகம் செய்துள்ளனர். இதனை மத்திய சமூக நலத் துறை அமைச்சர் தாவர்சந்த் அறிமுகம் செய்து வைத்தார்.

மாற்றுத்திறனாளிகள் வீல்சேரினை பயன்படுத்தி தங்களின் அன்றாட வாழ்க்கையை தாங்களாகவே செய்து வருகின்றனர். அவர்களை வீல் சேரில் உட்கார வைத்த பின்னர் தான் அதனை அவர்கள் பயன்படுத்த முடியும். மேலும் வீல் சேரலிருந்து ஏழுந்து நடக்கவோ, வேறு பணிகளை மேற்கொள்ளவும் சிரமப்படுவர்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நீண்ட நேரம் அமர்ந்த நிலையில் இருப்பதால் ரத்த ஓட்டத்தில் பிரச்சினை போன்ற வேறுவிதமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனைத் தவிர்க்கும் வகையில் சென்னை ஐஐடியில் இந்தியாவில் முதன் முறையாக எழுந்து நிற்கும் வீல் சேரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறனாளி ஒருவர் யாருடைய உதவியும் இன்றி உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்து நிற்க முடியும். மீண்டும் அதே நிலையில் அவர்களால் உட்கார முடியும்.
இந்த வீல் சேர்க்கு அரைஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் புதியவகை வீல் சேரை மத்திய சமூகநலத் துறை அமைச்சர் தாவர் சந்த் கெஹ்லோத் அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், குறைந்த விலையில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் வாங்க கூடிய வகையில் இதன் விலை இருந்தாலும், அதனை மேலும் விலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக எம்எல்ஏ, எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தி புதிய வகை வீல்சேரை குறைந்த விலைக்கு வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த புதிய வகையில் சேவையை பயன்படுத்திய சென்னையைச் சேர்ந்த அசோக் என்பவர் கூறும்போது, முதுகு தண்டுவட பிரச்சினையால் பாதிக்கப்பட்ட தனக்கு இந்த புதிய வீல் சேரை பயன்படுத்தியதன் மூலம் உடற்பயிற்சி செய்ய முடிகிறது. மேலும் தானாக எழுந்து பணிகளைச் செய்ய முடிவதால் மகிழ்ச்சியாக உள்ளது.
உட்கார்ந்த வகையிலான வீல்சேரில் இருந்தபோது எனது குழந்தையை யாராவது தூக்கி கொடுத்தால் மட்டுமே கொஞ்ச முடியும். ஆனால் தற்போது நாளே குழந்தையை தூக்கி கொஞ்சுவது சந்தோஷமாக உள்ளது. இதனை வாங்க கூடிய விலையில் தான் தயாரித்துள்ளனர் என தெரிவித்தார்.

ஐஐடி பேராசிரியர் சுஜாதா சீனிவாசன் கூறும் பொழுது, பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வகை வீல் சேரில் மோட்டார் பொருத்துவது என்பது எளிதானது. இதற்கான தேவை அதிகரிக்கும் போது விலை மிகவும் குறையும் என தெரிவித்தார்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.