சென்னை: அண்ணா நகரில் ஜூடோ தற்காப்புக்கலை பயிற்சி மையம் நடத்தி வந்தவர் கெபிராஜ். இவர், பாலியல் தொல்லை கொடுத்ததாக அங்கு பயிற்சி மேற்கொண்ட மாணவி அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கெபிராஜ் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, கெபிராஜை இரண்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்கலாம் என சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும், atccbcid@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமோ அல்லது 9498143691 வாட்ஸ்அப் எண் வாயிலாகவோ புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். அவ்வாறு புகார் அளிப்பவரின் பெயர், புகார் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
கெபிராஜ் மீது மேலும் ஒரு வழக்கு:
அதன்படி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கெபிராஜிடம் ஜூடோ பயிற்சி பெற்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் போக்சோ உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் கொடுத்த பெண் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரிடம் வீடியோ மூலம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கையில் சிபிசிஐடி அலுவலர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ‘பப்ஜி மதன் வழக்கில் தமிழ்நாடு காவல் துறை முறையாக விசாரிக்கிறது’ - அமைச்சர் மனோ தங்கராஜ்