சென்னை: இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டலங்கள் மற்றும் பணிமனைகளின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 5 கட்டங்களாக, ஆகஸ்ட் 14, 22, 29 மற்றும் செப்டம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
அதேபோல், மண்டலங்கள் மற்றும் பணிமனைகளில் தேர்தல்களை நடத்துவதற்காக, தேர்தல் கண்காணிப்பாளர்கள்; தேர்தல் பொறுப்பாளர்கள், பணிமனைகளின் தேர்தல் ஆணையாளர்களாக சிலர் நியமிக்கப்படுகிறார்கள்.
ஆகவே, கழக அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும், மண்டலங்கள் மற்றும் பணிமனைகளின் நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல்களை முறைப்படி நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நாளை நல்லடக்கம்