தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது. கரோனாவை தடுப்பூசியால் மட்டுமே முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதால், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.
அதனடிப்படையில், தமிழ்நாட்டுக்கு தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. மக்களும் கரோனா தடுப்பூசிகளை பொறுப்புடன் செலுத்திக் கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புனேவில் இருந்து விமானம் மூலம் 75 பார்சல்களில் ஒன்பது லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தன.
![vaccines arrived at Chennai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-vaccine-arrival-photo-script-7208368_05092021140343_0509f_1630830823_801.jpg)
இதனை மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு, குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி சேமிப்புக் கிடங்குக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து, பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'நிபா வைரஸ் பற்றி தேவையற்ற பதற்றம் தேவையில்லை'