ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1pm

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் 100 ரூபாய் அபராதம்

author img

By

Published : Jun 7, 2020, 1:06 PM IST

1.நிறவெறிக்கு எதிராக வெள்ளை மாளிகை அருகே போராட்டம்

வாஷிங்டன் : நிறவெறிக்கு எதிராக வெள்ளை மாளிகை அருகே நேற்று ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2.'கேரள வனத்துறை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது'

திருவனந்தபுரம்: கர்ப்பிணி யானையை மீட்கப் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என கேரள வனத்துறை தெரிவித்துள்ளது.

3.'இன்று முதல் சில்லறையாக மீன்களை வாங்க காசிமேடு செல்லக்கூடாது'

சென்னை: இன்று (ஜூன் 7) முதல் சில்லறையாக மீன்களை வாங்க, காசிமேடு கடற்கரைக்குச் செல்லக்கூடாது எனவும்; சில்லறை மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

4.அமெரிக்க ரியாலிட்டி ஷோவில் வாயைப்பிளக்கவைத்த இந்தியர்கள்!

மும்பை: கொல்கத்தாவை சேர்ந்த இரண்டு நடனக் கலைஞர்கள் "அமெரிக்காஸ் காட் டேலண்ட்" நிகழ்ச்சியில் தங்களது திறமைகளை வெளிக்காட்டி போட்டி நடுவர்களை வியக்கவைத்த சம்பவம் இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

5.'நிறுத்துங்க ஆதிக்கத்த நிறுத்துங்க' - அமேசான் நிறுவனருக்கு எலான் மஸ்க் கண்டனம்

வாஷிங்டன்: அமேசான், ப்ளூ ஆர்ஜின் ஆகிய நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பேசோஸ் வர்த்தகச் சந்தையில் தனது தனி ஆதிக்கத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

6.ஜாகிங் செய்த கரீனா, உடற்பயிற்சி செய்ய ஆர்வம் காட்டும் ரசிகர்கள்!

ஊரடங்கில் சற்று தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகை கரீனா கபூர் ஜாகிங் செய்யும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
7.பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு!

சென்னை: பொறியியல் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வினை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலித்து வருகிறது.

8.முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் 100 ரூபாய் அபராதம்!

கோவை: முகக்கவசம் இன்றி வெளியே வருபவர்களுக்கு ஒவ்வொரு முறையும் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராசாமணி எச்சரித்துள்ளார்.

9.தெலங்கானா முதலமைச்சரின் பண்ணை வீடு குறித்து ஆய்வு செய்ய சிறப்புக் குழு!

சென்னை: தெலங்கானா மாநில முதலமைச்சரின் மகன் வீடு ஓஸ்மான் சாகர் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்ய சிறப்பு குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு உத்தரவிட்டுள்ளது.

10.'அப்பா உலகத்தை மாற்றினார்!' - வைரலாகும் ஜார்ஜ் ஃப்ளாய்ட் வீடியோ

ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்னும் நபர் காவல் துறையினரால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது ஆறு வயது மகளுடன் அவர் விளையாடும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.