சென்னை மாதவரம் ரவுண்டானா வழியாக கஞ்சா கடத்திவரப்படுவதாகப் போதைப்பொருள் நுண்ணறிவு காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனைசெய்ததில் ஆறு பைகளில் 150 கிலோ கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
உடனடியாக கஞ்சாவைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த ஜான்சன் (27), துங்ககிரி வெங்கட துர்க சாய் பிரசாத் (25) என்பது தெரியவந்தது.
மேலும் விசாகப்பட்டினத்திலிருந்து கஞ்சாவைக் கடத்திவந்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனைசெய்ய முயன்றது தெரியவந்தது. இருவர் மீதும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க : தீவிர அரசியலுக்கு முழுக்கு போடுகிறாரா ஏ.கே. ஆண்டனி?