ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் ரூ.46 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கக்கட்டி பறிமுதல்! - 1 kg gold bar confiscated

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் கடத்தி வரப்பட்ட ரூ.46 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ தங்கக்கட்டியானது சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் ரூ.46 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்க கட்டி பறிமுதல்

author img

By

Published : Aug 2, 2022, 4:12 PM IST

சென்னை: சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்குப்பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் விமானப்பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் சென்றனர். பின்னர் சுங்கத்துறை அலுவலர்கள் சந்தேகத்தின் பேரில் விமானத்திற்குள் சென்று ஒவ்வொரு இருக்கையாக சோதனை செய்தனர். பின்னர் விமான கழிவறைக்குச்சென்று பார்த்தபோது அங்கு கறுப்பு நிற டேப் சுற்றப்பட்ட நிலையில் ஒரு பார்சல் இருந்தது.

அவற்றைப்பிரித்து பார்த்தபோது அதில் ஒரு கிலோ எடை கொண்ட தங்கக்கட்டிகள் இருந்தன. ரூ.46 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இவற்றைக்கடத்தி வந்தது யார்? பன்னாட்டு விமானமாக வந்து சென்னையில் இருந்து உள்நாட்டு விமானமாக செல்ல இருந்ததை அறிந்து கழிவறையில் வைத்துச்சென்றார்களா என சுங்கத்துறை அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:பரந்தூர் விமானநிலையம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான படிக்கட்டு - முதலமைச்சர் ஸ்டாலின்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.