செங்கல்பட்டு மாவட்டம் மேலகோட்டையூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் கோவிந்தராஜன். இவர் அரக்கோணம் தாலுகாவில் காவல் ஆய்வாளராக பணிப்புரிந்து வருகிறார்.
இவரது மகன் கார்த்திகேயன், தியாகராய நகரை சேர்ந்த துரைராஜ்(21) ஆகியோர் போரூரில் உள்ள நண்பரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சொகுசு காரில் சென்றுள்ளனர். பிறந்தநாள் விழாவில் இருவரும் மது அருந்தி உள்ளனர்.
இரவு விழாவை முடித்துவிட்டு காரில் இருவரும் திரும்பியபோது கார்த்திகேயன் தனது செல்போனை நிகழ்ச்சியில் மறந்து வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து கார்த்திகேயன் மறுபடியும் போரூர் பகுதிக்கு அதிவேகமாக காரை ஓட்டியுள்ளார்.
கார் விருகம்பாக்கம் வேர்ஹவுஸ் வழியாக வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மைய தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது உயிர்காக்கும் ஏர்பலூன் திறந்ததால் இருவருக்கும் லேசான காயம் மட்டும் ஏற்பட்டது.
தற்போது அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.