ETV Bharat / state

செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட வாக்குப் பதிவு - செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

local elections_vote registration
செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட வாக்குப் பதிவு
author img

By

Published : Oct 6, 2021, 11:58 AM IST

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 8 மாவட்ட கவுன்சிலர்கள், 74 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 160 ஊராட்சித் தலைவர்கள் 1,230 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

ஒவ்வொரு வாக்காளரும் 4 பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, நான்கு வண்ண வாக்குச்சீட்டுகளில் வாக்களித்துவருகின்றனர். தேர்தல் நடைபெறும் ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குச் சாவடிகளில் வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

local elections_vote registration
ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 15 ஊராட்சிகள் உள்ளன. இதில், 358 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றுவருகிறது.

இதில், 15 ஊராட்சி தலைவர்கள், 11 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள் பதிவுகளுக்காக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சென்னை அருகே உள்ள முடிச்சூர், பொழிச்சலூர், திரிசூலம் ஆகிய ஊராட்சிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர்.

அப்பகுதியில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி அருகே உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: வாக்களித்தும் என்ன பயன்... பிரதிநிதித்துவம் இல்லையே!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.