மக்களவைத் தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அரியலூரில் காவலர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் பதட்டமான வாக்குச்சாவடிகள் கிராமங்களில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்குப்பதிவை செலுத்தும் வகையில் இந்த அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அண்ணா சிலையில் தொடங்கிய இப்பேரணி மார்க்கெட் கடை வீதி தேரடி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் காவலர்கள் போக்குவரத்து காவலர்கள், ஊர்க்காவல் படையினர், தமிழ்நாடு சிறப்பு படையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்