ETV Bharat / state

கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

author img

By

Published : Aug 5, 2020, 7:44 PM IST

அரியலூர்: ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா பாதித்த இடங்களை மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆய்வு மேற்கொண்டார்.

கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளான ஜூபிலி சாலை, ஸ்டேட் பேங்க் காலனி உள்ளிட்ட பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அமைந்துள்ள இடங்களை மாவட்ட ஆட்சியர் ரத்னா இன்று (ஆகஸ்ட் 5) ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை குறித்து வருவாய்த் துறை, நகராட்சி அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பணிகள் நடைபெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவர் மூலம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். கரோனா பரிசோதனைகள் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார். குறிப்பாக, முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு முறையான பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க:தற்காலிக காய்கறி சந்தையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.