டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் போட்டியில் உலகின் ஏழாம் நிலை வீரரான ஜப்பான் வீராங்கனை யமகுச்சியை இந்திய வீராங்கனை பி.வி. சிந்து எதிர்கொண்டார்.
ஆரம்பம் முதலே அதிரடி காட்டத் தொடங்கிய சிந்து, 5-3 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலைப் பெற்றார். விறுவிறுப்பான காலிறுதிப் போட்டியில், பி.வி. சிந்து 21-13, 22-20 என்ற நேர் செட்களில் ஜப்பான் வீராங்கனை அகேனா யமகுச்சியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.
இவர் அரையிறுதியில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த ரட்சனோக் இன்டானோன்(Ratchanok Intanon) அல்லது தைவான் நாட்டை சேர்ந்த டாய் ட்ஸு யிங்கை(Tai Tzu Ying) எதிர்கொள்வார் என தெரிகிறது.
இந்தாண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்பில் சிந்து கடைசியாக ஜப்பான் வீராங்கனை யமகுச்சியை வீழ்த்தியிருந்தார்.
முன்னதாக, மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்து, டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்ஃபெல்ட்டை (Mia Blichfeldt) வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.