இந்திய வாலிபால் கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு விஎஃப்ஐ தலைவர் எஸ். வாசுதேவன் தலைமை தாங்க, விஎஃப்ஐ உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
புரோ வாலிபால் லீக்கின் பிரதான ஸ்பான்ஸரான பேஸ்லைன் வென்சர்ஸ் நிறுவனம் ஒப்பந்த விதிகளை மீறி செயல்பட்டதால், அதற்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி, அந்த நிறுவனத்தை புரோ வாலிபால் தொடரிலிருந்து நீக்கவேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் புரோ வாலிபால் லீக் என்ற பெயரை இந்தியன் வாலிபால் லீக் (ஐவிஎல்) எனவும் மாற்றி விஎஃப்ஐ தெரிவித்துள்ளது. அதேபோல் இரண்டாவது சீசன் திட்டமிட்டபடி வரும் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் கூறியுள்ளது.
இதையும் படிங்க: புரோ வாலிபால் இரண்டாவது சீசனுக்கான தேதி அறிவிப்பு - ரசிகர்கள் மகிழ்ச்சி!