டோக்கியோ : ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் கலந்துகொள்ள உலகெங்கிலும் இருந்து 11 ஆயிரம் தடகள வீரர்கள் வந்துள்ளனர்.
அவர்களுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்களும் வந்துள்ளனர். இதனால் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தென் ஆப்பிரிக்க கால்பந்து வீரர்கள்
இந்நிலையில் கடந்த வாரம் பிரேசில் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல்களில் பணியாற்றிய வீரர்களுக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டன. எனினும் இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை, ஏனெனில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் வேறு யாருடனும் தொடர்பில் இல்லை என ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கால்பந்து வீரர்கள் 2 பேருக்கு கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது சக விளையாட்டு வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கரோனா இல்லாத ஒலிம்பிக் கிராமம்?
மேலும் கோவிட் இல்லாத நகரமாக ஒலிம்பிக் கிராமம் திகழ்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து பேசிய செய்தித் தொடர்பாளர், முன்னதாக ரக்பி வீரர் ஒருவருக்கு கரோனா பெருந்தொற்று பாதிப்பு விமானத்திலே கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
தற்போதுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்க கால்பந்து வீரர்கள் இருவருக்கு கோவிட் பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய பதிலை உடனடியாக அளிக்க வேண்டும்” என்றார்.
பாதிப்பு திடீர் அதிகரிப்பு
டோக்கியோவில் கடந்த 29 நாள்களாக இல்லாத வகையில், நேற்று (ஜூலை 18) ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவிட் பாதிப்பு வழக்குகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து நகரின் முக்கிய பகுதிகளில் சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : டோக்கியோ ஒலிம்பிக்- பிரேசில் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களுக்கு கரோனா!