மும்பை : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை அணிகள் மோதின. இந்த ஆட்டம் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் மைதானத்தில் நடந்தது. ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் சூர்ய குமார் யாதவ் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடித்து 36 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தப்படியாக அவுட் ஆகாமல் திலக் வர்மா 38 ரன்னும், டேவால்டு பிரேவிஸ் 29 ரன்னும் எடுத்திருந்தனர். கேப்டன் ரோகித் சர்மா (3) உள்பட மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்கள்.
கடைசி நேரத்தில் களமிறங்கிய பொல்லார்டு 5 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸர்களும் அடங்கும். இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங்கை தொடர்ந்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக வெங்கடேஷ் ஐயர் அவுட் ஆகாமல் 41 பந்துகளில் ஒரு சிக்ஸர் ஆறு பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.
அப்போது, அவருக்கு பக்கபலமாக பேட் கம்மின்ஸ் 12 பந்துகளில் அவுட் ஆகாமல் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். இந்நிலையில், கொல்கத்தாவின் வெற்றிக்கு 26 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன. அப்போது களத்தில் நின்ற கம்மின்ஸ், கேகேஆர் வெற்றிக்கு வித்திட்டார். இந்நிலையில், கொல்கத்தா 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. கம்மின்ஸ், 15 பந்துகளில் 56 ரன்கள் குவித்திருந்தார்.